Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 18 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எல்.தேவ், ஜவ்பர்கான், றிபாயா நூர், எம்.எஸ்.வதனகுமார்)
கரடியனாறு வெடி விபத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன், நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல கிரிக்கெட் வீரருமான சனத் ஜயசூரிய, மீள் குடியேற்ற பிரதி அமைச்சரின் செயலாளர் சாந்தினி பெரேரா, மீள் குடியேற்ற அமைச்சின் இணைப்புச் செயலாளர்களான பி.ரவீந்திரன், உருத்திர மலர் ஞானபாஸ்கரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஸம்மில் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த இவர்கள், பாதிக்கப்பட்டவர்களைப் பார்வையிட்டு அவர்களின் உடல் நலன்கள் குறித்து உரையாடியதுடன் வைத்திய நிலைமை குறித்து போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எம்.முருகானந்தம், மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக வைத்திய பீட பீடாதிபதியும், போதனா வைத்தியசாலை சிரேஷ்ட வைத்தியர் கருணாகரன் ஆகியோருடனும் கலந்துரையாடினர்.
மட்டக்களப்பு வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற வெடிவிபத்தில் காயமடைந்து 44 பேர் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 4 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், ஒருவர் மரணமானதாகவும் ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் டாக்டர் எம்.முருகானந்தம் தெரிவித்தார்.
6 minute ago
43 minute ago
45 minute ago
jameel Saturday, 18 September 2010 08:47 PM
நல்ல மனித நேயம் மிக்கவர் சனத் ஜெயசூரிய.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
43 minute ago
45 minute ago