Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிபாயா நூர்)
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சேதமடைந்த கமநல சேவைகள் நிலையத்தினை பார்வையிட கமநல திணைக்கள ஆணையாளர் சவீந்திர ஹேவ விதாரன நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு கரடியனாறுக்குச் சென்றார்.
இந்த சம்பவத்தில் முற்றாக சேதமடைந்துள்ள கமநல சேவைகள் நிலையத்தினை பார்வையிட்ட ஆணையாளர், அதன் சேத விபரங்களை மட்டக்களப்பு மாவட்ட உதவி கமநல ஆணையாளர் டாக்டர் றுசாந்தனிடம் கேட்டறிந்து கொண்டார்.
கரடியனாறு கமநல சேவைகள் நிலையத்தின் கட்டிடம் மற்றும் அதன் உடமைகள் குறித்த வெடிப்புச் சம்பவம் காரணமாக முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் 4 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன், இதனால் 7500 விவசாயக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளரிடம் தெரிவித்ததாக மட்டக்களப்பு உதவி கமநல ஆணையாளர் றுசாந்தன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago
05 Jul 2025