2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

வெருகல் ஆற்றில் நீராடிய சிறுமி நீரில் மூழ்கி மரணம்

Super User   / 2010 செப்டெம்பர் 26 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

திருகோணமலை - மட்டக்களப்பு எல்லையிலுள்ள வெருகல் ஆற்றில் இன்று   நீராடிக்கொண்டிருந்த 8 வயதான ஒரு சிறுமி நீரில் மூழ்கி இறந்துள்ளாள்.

வாகரை 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திருநா மதூஷிகா என்ற சிறுமியே இவ்வாறு இறந்ததாக அவரின் உறவினர்கள் தமிழ் மிரர் இணையத்தளத்திற்கு  தெரிவித்தனர்.

வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோவில் வருடாந்த உற்சவத்திற்காக சென்ற சென்ற இச்சிறுமி, இன்று காலை 11 மணியளவில் தனது உறவினர்கள் மற்றும் ஏனைய பக்தர்களுடன் நீராடிக் கொண்டிருந்தபோது இச்சிறுமி நீரோட்டத்தினால் இழுத்துச் செல்லப்பட்டாள்.

"சிறுமியுடன் அவளின் 10 வயதான சகோதரனும் நீரோட்டத்தினால் இழுத்துச் செல்லப்பட்டனர். அச்சகோதரனைக் காப்பாற்ற முடிந்த போதிலும் சிறுமியை காப்பற்ற முடியவில்லை" என குடும்ப அங்கத்தவர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த ஆற்றில் முதலைகள் இருப்பதால் சிறுமி  நீரில் இழுத்துச்செல்லப்பட்டதைக் கண்டவர்களும் முதலை என நினைத்து ஒதுங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது சிறுமியின் சடலத்தை வாகரை பொலிஸாஸார், வெருகலம்பதி ஆலய பொலிஸாருடன் இணைந்து உறவினர்கள் தேடி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .