Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.எல்.ஜௌபர்கான்)
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பிரதி பிரதம சங்கநாயக்கரும் மட்டக்களப்பு ஸ்ரீமங்களாராம ரஜமகா விகாரையின் விகாராதிபதியுமான அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு நகரில் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை நேற்று ஆரம்பித்துள்ளார்.
மட்டக்களப்புக்கு விஜயம் செய்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை தான் சந்திப்பதற்கு முற்படுகையில் ஏனைய அமைச்சர்கள், ஊடகவியலாளர்கள், பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தன்னை விரட்டியதாகவும், இவ்வாறு அமைச்சர் தன்னை அவமானப்படுத்தியைக் கண்டித்தே இந்த சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்திருப்பதாகவும் சுமணரத்ன தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மங்களா ராம விகாரைக்கு முன்னால் இப்போராட்டம் தொடர்கிறது. அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேரடியாக வந்து தன்னிடம் மன்னிப்பு கோரும் வரை தனது சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் தொடருமென அவர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
31 minute ago
37 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
37 minute ago
2 hours ago
4 hours ago