2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

கல்லடி கடற்கரையில் பல்வேறு கலாசார நிகழ்வுகள்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

சர்வதேச உல்லாச தினத்தினை முன்னிட்டு பல்வேறு கலாசார நிகழ்வுகள் கல்லடிக் கடற்கரையில் இடம்பெற்றன. கிழக்கு மாகாண சபையின் எற்பாட்டில் ஒழுங்க செய்யப்பட்ட மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பின் பாரம்பரியங்களை பறைசாற்றுகின்ற பல்வேறு கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்தோடு இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது. பல்லாயிரக் கணக்கான மக்கள் இந்நிகழ்வுகளைக் கண்டு மகிழ்ந்தார்கள். இந்நிகழ்வுகளில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிலையத்தின் விரிவுரையாளர் செல்வி.து.உசாந்தினியின் மாணவிகளது நாட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

விசேடமாக இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு முதல்வர் சந்திரகாந்தன் பெறுமதி மிக்க பரிசில்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--