Super User / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிபாயா நூர்)
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் இரண்டாவது நாளாக இன்றும் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை சந்திக்க தான் முயற்சித்த போது, தன்னை விரட்டி அவமானப்படுத்தியதற்கு அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தன்னிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்பதற்காகவே அம்பிட்டிய சுமனரத்தின தேரர் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்குள்ளேயே தேரர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார். சரியான தீர்வு கிடைக்கும் வரை தான் உண்ணாவிரதத்தை கைவிடப் போவதில்லை எனவும் தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை வைத்தியர்கள் தேரரின் உடல் நிலையை பரிசீலித்தனர்.
24 minute ago
36 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
36 minute ago
2 hours ago
2 hours ago