2026 ஜனவரி 27, செவ்வாய்க்கிழமை

’எந்த நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கு உதவி’

Freelancer   / 2026 ஜனவரி 27 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பில் உள்ள இந்தியன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் இலங்கைக்கு விசேட இடம் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

 இலங்கைக்கான இந்திய அபிவிருத்தி ஒத்துழைப்பு 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. அதில் 850 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடைகளாக வழங்கப்பட்டுள்ளன.

டித்வா புயலின் போது இந்தியா முதற்கட்டமாக உதவி வழங்கியது. மனிதாபிமான உதவிகள் துரிதமாகவும் நிபந்தனையற்ற வகையிலும் வழங்கப்பட்டன.

இந்தியா, இலங்கையின் நம்பிக்கைக்குரிய மற்றும் நம்பகமான பங்காளியாகத் தொடர்ந்து செயற்படும் என்றார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X