2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த புள்ளி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 28 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.சகாதேவராஜா)

"உங்கள் திறமைக்கு எங்கள் பாராட்டு" எனும் மகுடத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி 100இற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற 2,500இற்குகு மேற்பட்ட மாணவர்களை கௌரவித்து மனித அபிவிருத்தி தாபனம் சான்றிதழ்களையும் பரிசுகளையும் பதக்கங்களையும் வழங்கி வருகின்றது.

இம்முறையும் இப் பாராட்டு விழாவை மலையகத்தில் மட்டுமல்லாமல் கிழக்கிலும் நடத்த மனித அபிவிருத்தித் தாபனம் விரிவான ஏற்பாடு செய்துள்ளதாக தாபனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் தெரிவித்தார். சிறு வயதில் ஊக்கப்படுவதன் மூலம் பெருந்தோட்டத்தின் கல்வி அபிவிருத்தியில் எதிர்காலத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இவ்வாறான பாராட்டு விழாக்களை தாபனம் நடத்தி வருகின்றது.

மனித அபிவிருத்தி தாபனம் இலங்கையின் பல பாகங்களில் சமூக அபிவிருத்திக்காக பல்வேறு செயற்பாடுகளை செய்து வருகின்றது. கல்விஇ பொருளாதாரம், சம உரிமை, சமாதானம், பால்நிலை சமத்துவம் போன்ற பல்வேறு செயற்பாடுகளை இலக்குப் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துகின்றது.

கல்வியின் சார் பல வேலைத்திட்டங்கள் பெருந்தோட்ட துறைகளில் கடந்த இரு தசாப்த காலங்களாக அமுல்படுத்தி வருகின்றது. மலையகக் கல்வியின் அபிவிருத்திக்காக குரல்கொடுத்து வருகின்ற நிறுவனம் 5ம் தர புலமைப்பரிசில் பரீ;ட்சை எழுதும் மாணவர்களை கௌரவிப்பு நிகழ்ச்சிகளை கடந்த மூன்று வருட காலமாக பெருந்தோட்ட துறையை மையமாகக் கொண்டு நடத்தி வந்துள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--