Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிபாயா நூர்)
கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் காயமடைந்த பொதுமக்கள் இருவருக்கு நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதாக செங்கலடி பிரதேச செயலாளர் கௌரி தினேஸ் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் செங்கலடி பிரதேச செயல பிரிவிற்குற்பட்ட இருவருக்கு தலா 5,000 ரூபா வீதம் வழங்கப்பட்டன.
அண்மையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்று உரியவர்களிடம் காசோலையை கையளித்ததாக செங்கலடி பிரதேச செயலாளர் கௌரி தினேஸ் தெரிவித்தார்.
அதிக காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்ற இருவருக்கே இக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதேவேளை, இச்சம்பவத்தில் வீடுகள் சேதமடைந்த கரடியனாறு பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு 40,000ரூபா, 35,000ரூபா, 3,500ரூபா நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.
இதை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வைத்து உரியவர்களிடம் கையளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
3 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago