2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தமிழினம் அழிவுப்பாதையில் செல்லாதிருப்பதற்காகவே அரசியல் மாற்றுப் பயணத்தை ஏற்படுத்திக் கொண்டேன்:பி.பிய

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 01 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்தேவ்.)
 

எம்முடைய தமிழ் இனம் தொடர்ந்தும் அழிவுப்பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறது. இதற்கு இடமளிக்கக் கூடாது என்பதற்காகவே எனது அரசியல் மாற்றுப் பயணத்தை ஏற்படுத்திக்கொண்டேன் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.பியசேன தெரிவித்தார்.
 
சர்வசேத சிறுவர் தினத்தையொட்டி வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை  கல்வி அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் அங்கு உரையாற்றிய அவர், அம்பாறை மாவட்டத்திலிருந்து, மட்டக்களப்பு மாவட்டத்தல் நடைபெறும் இதுபோன்றதொரு சிறுவர் தின நிகழ்வில் பங்கு பெறுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். மாணவர்களாகிய நீங்கள் எதிர்காலத் தலைவர்கள். காலையில் எழுந்து கடவுளை வணங்கிய பின்னர் பெற்றோரை வணங்குங்கள். பாடசாலை சென்று சிறந்த கல்வியை பெறுங்கள்.
 
கீதாசாரம், இராமாயாணம், மகாபாரதம், திருக்குறள் போன்ற அரிய நூல்களைப் படியுங்கள். இலட்சியத்துடன் படியுங்கள். இலட்சிய வேட்கைகள் என்றும் வீழ்வதில்லை. தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றுங்கள். அதுவே உங்களுடைய இலட்சியமாக அமையட்டும்.
 
தமிழ் அரசியல்வாதிகள் இதுவரை சாதித்தது என்ன?, அழிவுகள் தான் மிச்சம். இதனை யாராலும் மறுதலிக்க முடியுமா?, நியாயப்படுத்த முடியுமா?, எனவே அம்பாறை மாவட்ட மக்கள் மட்டுமல்ல, தமிழ் மக்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் சேவையாற்றுவதே எனது குறிக்கோள் என்றார்.
 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .