2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

அநாதைச் சிறுவர்களுக்கு ஒரு வருடத்திற்கான பராமரிப்பு செலவு நிதி வழங்கல்

Super User   / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

(றிபாயா நூர்,  ஜவ்பர்கான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் சுனாமி போன்ற அனர்த்தங்களினால் தாய் தந்தையை இழந்த  அநாதைக் குழந்தைகளுக்கான பராமரிப்புச் செலவுக் கொடுப்பனவுகளை காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தினால் இன்று சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளருமான மௌலவி ஏ.எம்.அலியார் மற்றும் அஷ்ஷெய்க் ஜாபீர் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்து கொண்டு இக்கொடுப்பனவை வழங்கி வைத்தனர்.

ஒரு பிள்ளைக்கு மாதம் 2000 ரூபா வீதம் 49 அநாதைப் பிள்ளைகளுக்கு ஒரு வருடத்திற்கான கொடுப்பனcவு வழங்கி வைக்கப்பட்டன.

alt
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--