Kogilavani / 2010 ஒக்டோபர் 03 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
வாகரை பிரதேசத்தில் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
புதூர் கதிரவெளியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் உதயக்குமார் (வயது 28) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் மாவிலாற்றில் மீன் பிடிப்பதற்காக சென்ற போது வழியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
படுகாயமுற்ற நிலையில் கதிரவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு ஆதார வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட இவர் , அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
7 minute ago
15 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
59 minute ago
1 hours ago