Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 04 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அனுருத்தன்)
வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமிகள் ஆலயத்தின் நிர்வாகத்தை மீண்டும் பாரம்பரிய கங்காண முறையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு இந்து கலாசார அலுவல்கள் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன் வெருகல் பிரதேச செயலாளரைக் கேட்டுள்ளார்.
தற்போது ஆலயத்தின் கங்காணமான முன்னாள் ஆர்.ஞானகணேசன், பௌத்த சாசனம் மற்றும் மத விவகார பிரதியமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ் குணவர்த்தனாவிடம் தொடர்பு கொண்டு இது தொடர்பாக விண்ணப்பித்ததை அடுத்து பிரதியமைச்சர் குறித்த திணைக்களத்திற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிப்புரைகளை விடுத்திருந்தார். இது தொடர்பாக இந்து சமய விவகார திணைக்கள பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன் பிரதியமைச்சருக்கு அனுப்பியுள்ள பதிலில்,
பாரம்பரிய நிர்வாகத்தின் கீழ் ஆலயத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளர் கேட்கப்பட்டுள்ளார்.
சிந்து என்ற நான்கு கிராமங்களை உள்ளடக்கிய அமைப்புக் கூட்டம் கூட்டப்பட்டு ஆலயத்தை நிர்வகிப்பதற்கான நிர்வாக சபை தெரிவு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆலயத்தின் முன்னாள் கங்காணமான ஆர்.ஞானகணேசன் இது தொடர்பாக மதவிவகார பிரதியமைச்சருக்கு ஏற்கனவே அனுப்பிய கடிதத்தில் “ ஆலயத்தின் நிர்வாகம் 18 ஆண்டுகளுக்கு முன்பு பாரம்பரிய கங்காண முறையின் கீழ் இருந்து வந்தது. போர்காலச் சூழ்நிலையில் பாரம்பரிய முறை சீர்குலைந்து போனது. இந்நிலையில் பாரம்பரிய முறையான கங்காண முறையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டிருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆர்.ஞானகணேசன், “சிந்து எனப்படும் ஈச்சிலம்பற்று, பள்ளிக்குடியிருப்பு, மல்லிகைத்தீவு, ஆணைத்தீவு ஆகிய நான்கு கிராம மக்களின் ஆலோசனையின்படி மீண்டும் கங்காண நிர்வாக முறையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் 18 திருவிழாக்களை நடத்தும் கிராம மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களைக் கொண்ட புதிய சபையை ஏற்படுத்தி இவர்களுடன் கங்காணங்களும் இணைந்து கோவில் நிர்வாகத்தை பாரம்பரிய முறையில் நடத்துவதற்காகவே இந்நடவடிக்கை எனக் குறிப்பிட்டார்.
43 minute ago
4 hours ago
01 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
4 hours ago
01 Jan 2026