2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

முதியவர்களுக்கு உடுதுணிகள் அன்பளிப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

 

 

(றிபாயா நூர்)

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளையினால் வறிய முதியவர்களுக்கு உடு துணிகள் வழங்கும் வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை புதிய காத்தான்குடி அஷ்ஷஹ்றா ஹிஸ்புல்லா பாலர் பாடசாலையில் நடைபெற்றது.


சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளைத் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லா தலைமையில் இடம்பெற்றது.

இவ்வைபவத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளை தளைவர் தி.வசந்தராசா மற்றும் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகஸ்தர் கோமலேஸ்வரன் உட்பட முதியோர்களும் இதில் கலந்து கொண்டனர்.

இதன்போது காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 100 வறிய முதியவர்களுக்கு உடு துணிகள் வழங்கப்பட்டதுடன் மூன்று பாடசாலைகளுக்கும், மூன்று பாலர் பாடசாலைகளுக்கும் முதலுதவி உபகரணங்கள் அடங்கிய பைகளும் வழங்கப்பட்டன.

alt

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .