Super User / 2010 ஒக்டோபர் 03 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(றிபாயா நூர்)
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள க.பொ.த(உ/த) வர்த்தக பிரிவு வணிகக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வணிகக் கல்வி தொடர்பான கருத்தரங்கொன்று இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு தொழில்சார் கற்கை நிலையம் ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில் கிழக்கு மாகாண பிரதிக்கல்விப் பணிப்பாளர் சிதம்பர மூர்த்தி, பேராசிரியர் ஜகத் பண்டார, கிழக்கு பல்கலைக்கழக வணிக பாட சிரேஷ்ட விரிவுரையாளர் வி.கணசிங்கம் என பலர் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 100 மாணவர்களும் 50 ஆசிரியர்களும் இதில் கலந்து கொண்டனர்.
இதன் போது வணிகக்கல்வி தொடர்பான பல்வேறு தலைப்புக்களில் விரிவுரைகள் நடத்தப்பட்டன.
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .