2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

காரையக்கன்தீவு போக்குவரத்து விரைவில் ஆரம்பம்.

Kogilavani   / 2010 ஒக்டோபர் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                      alt

(றிபாயா நூர்)


காத்தான்குடிக்கும்  வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கரையாக்கன்தீவுக்கும் இடையிலுள்ள வாவியினூடான போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக காத்தான்குடி நகர சபையின் பிரதித்தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.

கிண்ணியா பாலம் அமைக்கப்படுவதற்கு முதல் அங்கு பயன் படுத்தப்பட்ட 40 அடி நீளமான பாதையினைக்கொண்டே இப்போக்கு வரத்துப் பாதையை ஏற்படுத்துதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.

இப்பாதையினை கிண்ணியாவிலிருந்து கொண்டுவருவதற்கு காத்தான்குடி நகர சபை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இப் பாதையினூடாக கால்நடைகள், உட்பட மரக்கறி வகைகள் என்பவற்றை இலகுவாக கொண்டு செல்வதற்கும்கும் கரையாக்கன் தீவுப்பிரதேச மக்கள் காத்தான்குடிக்கு வந்து பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு செல்வதற்கும் முடியும்  என காத்தான்குடி நகர சபையின் பிரதித்தலைவர் அஸ்பர் மேலும் தெரிவித்தார்.

இப்பாதையினை காத்தான்குடி நகர சபைக்கு வழங்குமாறு வீதி அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள்  பிரதியமைச்சரிடம் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதிமைச்சர் ஹிஸ்புல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார் எனவும் காத்தான்குடி நகர சபையின் பிரதித் தலைவர் அஸ்பர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .