Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 09 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எல்.தேவ்)
பிரச்சினையைத் தேடுவதற்காக மீண்டும் மீண்டும் ஆணைக்குழுக்களை அமைப்பது நேரத்தை வீணடிக்கும் செயல். சிறுபான்மையினர் என்று எவரும் இல்லை என்று ஜனாதிபதி கூறியிருக்கிறார். அவ்வாறு கூறாமல் 'சிறுபான்மை பெரும்பான்மை என்றில்லை, சகலரும் இலங்கையரே' என்று அவர் கூறியிருந்தால் சந்தோசமாக இந்திருக்கும் என்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் அ.செவேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்குமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பெரும்பான்மை இனத்தின் செயற்பாட்டினால் யுத்தநிறுத்த ஒப்பந்தம் செயலிழந்தன. தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளும் அரச கரும மொழியாக்கப்பட வேண்டும் அவ்வாறு அரசியலமைப்பைத் திருத்த வேண்டும்.
இலங்கை - இந்திய ஒப்பந்தம் கட்டணமாக அமுல்படுத்தப்பட வேண்டும் வடக்கு கிழக்கை பிரித்தமை பாரிய துரோகமாகும். யுத்த வன்முறைக்கு அப்பால் கிழக்கு மாகாண சபை நிறுவப்பட்டது. அதில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அமுல்படுத்தப்படுவதில்லை.
போர்நிறுத்த உடன்படிக்கைக்கு எதிராக இனவாதிகள் இனரீதியாக உசுப்பி விடப்பட்டமையினால் ஒப்பந்தம் தொடர்ந்து செயற்படாமல் போய்விட்டதுஇ அன்று அபிவிருத்தி என்னும் பெயரில் ஐக்கிய தேசியக்கட்சி தமிழர்களின் தாயக பூமியை அபகரித்தது. இன்று இராணுவத்திற்கென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அப்பூமியை சுறையாடி வருகிறது.
அரசாங்கம் முழுநாட்டிற்கும் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் இனந்தெரியாத குழுக்கள் என்று யாரை நாம் குறிப்பிட்டுச் சொல்வது? அதனை இந்த ஆணைக்குழுவே தேடிக்கண்டுபிடித்து எமக்கு அறிவிக்க வேண்டும்' என்றார்.
இங்கு சாட்சியமளித்த ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் மட்டு. அம்பாறை மாவட்டத் தலைவர் இரா துரைரெட்ணம் 'தனது சாட்சியத்தில், இலங்கையில் ஜனநாயக சுழல் ஏற்பட்டு அமைதி ஏற்படுத்தப்பட்டு எந்த ஒரு கிராமத்துக்குக் கூட எந்த வேளையிலும் சென்று வரக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
அப்படியிருந்தாலும், கிழக்கு மாகாணத்தில் மட்டும் தான் ஒரு இராணுவத்திலிருந்தவர் ஆளுநராக இருக்கிறார். எந்த ஒரு விடயத்திற்கும் இன்னமும் தமிழ் மக்களைச் சந்தேகமாகத் தூரத்தில் வைத்து பார்ப்பவராக அவர் இருக்கிறார். அப்படிப்பட்டவரை வைத்துக் கொண்டு மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்ய முடியாது. நல்ல திறமையான பொது நிருவாக சேவைகள் தரத்திலுள்ளவர்கள் இருக்கையில், இவ்வாறானவரை வைத்திருப்பதானல் மக்கள் மத்தியில் அரசாங்கம் நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்ள முடியாது' என்றார்.
அனர்த்த முகாமைத்துவ பெண்கள் அமைப்பு சார்பில் சாட்சியமளித்த கேதீஸ்வரி யோகதாஸ், '30 வருடகாலமாக நடைபெற்ற யுததத்தினால் பல்வேறு விதமாக பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கியமானவர்கள் கணவனை இழந்த பெண்களாகும்.
அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் இருப்பதுடன் அதில் 2935 பேர் யுத்தத்தினர் கணவனை இழந்து விதவையாகியுள்ளர். மிக வறிய நிலையிலுள்ள இவர்கள் கணவனை இழந்திருப்பதனால் வாழ்க்கையைக் கொண்டு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏறபட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இராணுவத்தினருக்கு அஞ்சி வாழ வேண்டியதொரு நிலையே காணப்படுகிறது' என்றார்.
சமாதான நிலையத்தின் சார்பில் அருள்தந்தை மில்லர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநாதர், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் குருநாதன் ஆகியோரும் சாட்சியமளித்தனர்.
இன்றைய சாட்சியங்களைப் பதிவு செய்யும் செய்பாட்டில், எச்.எம்.ஜீ.எஸ்இபலிஹக்கார, ரொஹான் பெரேரா, கரு ஹங்வத்த, எம்.பீ. பரணகம, மனோகரி இராமநாதன், சீ.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்றைய முறைப்பாட்டுப் பதிவு நிகழ்வில் சுமார் 1500 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த முறைப்பாடுகள் மற்றும் சாட்சியங்கள் குறித்து விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆணைக்குழுவினர் தெரிவித்தனர்.
----
18 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
47 minute ago
2 hours ago