2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

நல்லிணக்க ஆணைக்குழுவிடம் இரகசியமாக சாட்சியம்

Super User   / 2010 ஒக்டோபர் 10 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு இன்று ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போது, பெண்கள் உட்பட நான்கு பேர் ஆணைக்குழுவிடம் இரகசியமான முறையில் சாட்சியம் அளித்தனர்.

இன்று ஆணைக்குழு முன் பகிரங்கமாகத் தோன்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பாக சாட்சியமளித்த சாட்சிகளிடம்  இரகசியமாக யாராவது சாட்சியம் அளிக்கப் போகின்றீர்களா? என ஆணைக்குழு உறுப்பினர்கள் கேட்ட போது,  ஆம் என்று பதிலளித்த சாட்சிகளிடம் மட்டுமே ஆணைக்குழு சாட்சியங்களை இரகசியமாக பதிவு செய்தது.

இவர்களிடம் சாட்சியங்களைப் பதிவு செய்த போது பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என யாரும் மண்டபத்தினுள் இருப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.

ஆணைக்குழு உறுப்பினர்கள் வாகரைப் பிரதேசத்திற்கு விஜயம் செய்து, அங்கு மீள்குடியேற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து நேரடியாக பார்வையிட்டனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .