2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

தமிழ், முஸ்லிம் என்ற வித்தியாசத்தை ஏற்படுத்தினால் எதிர்காலத்துக்கு ஆபத்து

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 11 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(றிபாயா நூர்)

தமிழ், முஸ்லிம் விவசாயிகள் என்று பார்ப்பதைவிட விவசாயம் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் என்று பாக்ப்பதே சிறந்ததாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே பசீர் சேகுதாவூத் மேற்கண்டவாறு கூறினார்.அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,  ‘மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அடிப்படைவ வாழ்வாதாரம் விவசாயமாகும். இதில் தமிழ் முஸ்லிம் என்று பார்க்க வேண்டியதில்லை' என்றார்.

தமது விவசாய நிலங்களுக்குள் விவசாய நடவடிக்கைகளுக்காக செல்லும் ஒரு சமூகத்தின் விவசாயிகளை குழுவாக சோர்ந்து தாக்குவது அவர்களை விரட்டியடிப்பது மற்றும் அவர்களின் விவசாய நிலங்களை தீ மூட்டி எரிப்பது நல்ல விடயமல்ல.

இவ்வாறு செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். விவசாயக்காணி விவகாரங்கள் தொடர்பாகவும் மேய்ச்சல் தரை நிலங்கள் தொடர்பாகவும் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும்.
இதில் அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் விவசாயிகள் உள்ளடங்களாக அனைவரையும் கூட்டி பேசி இதை தீர்த்துக்கொள்ள வேண்டும்.

தாக்கப்பட்ட விவசாயிகளின் புகைப்படங்கள் மற்றும் எரிக்கப்பட்ட விவசாயங்கள் தொடர்பாக வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை இங்கு நான் கொண்டு வந்துள்ளேன் தேவையாயின் காட்ட முடியும்.

அரசியல்வாதிகள் இதை சாதகமாக்கிக்கொண்டு வீணான குழப்பத்தை எற்படுத்த வேண்டாம். 25வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பது தற்போதுள்ள ஒருவருக்கு தெரியாமல் இருக்கலாம்.
இரண்டு விடயங்களை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். விவசாயிகள் மீது வண்முறையை பிரயோகிக்கக்கூடாது.

விவசாயக் காணிகள் மற்றும் கால் நடை மேய்ச்சல் நிலம் தொடர்பாக வுள்ள பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும். தமிழ் முஸ்லிம் என்ற வித்தியாசத்தை ஏற்படுத்தி நாம் செயற்படுவோமானால் எதிர்காலத்தில் இன்னுமொரு தரப்பினரிடமிருந்து ஆபத்துள்ளது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
 
அரசியல் வாதிகள் இது விடயத்தில் கவனமெடுத்து தீர்த்து வைக்கவில்லையானால் தொடர்ந்து இப்பிரச்சனை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் என பசிர் இங்கு மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .