2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

யானை தாக்கியதில் படுகாயமடைந்த பிள்ளைகள் தொடர்ந்து சிகிச்சையில்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 13 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.எல்.ஜவ்பர்கான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்ற கிராமமான வெல்லாவெளி 39ஆம் கொலனியில் காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த சிறுவனும் சிறுமியும்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்களது உடல்நிலை தேறிவருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

39ஆம் கொலனியிலுள்ள தமது வீட்டில் அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோதே, நேற்று செவ்வாய்க்கிழமை  அதிகாலை 1.30 மணியளவில் யானை நுழைந்து தாக்கியுள்ளது.

இச்சம்பவத்தில் சில்வா லீலாவதி என்பவரே யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவர் ஆவார்.  

அவரது பேரப்பிள்ளைகளான சிறிபால அனுசா (7வயது), சிறிபால தவேந்திரன்(2 வயது) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர் என வெல்லாவெளி உதவி பிரதேச செயலாளர் கே.வரதராஜன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .