2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

வாகனேரியில் மீனவர் சங்க கட்டிடம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காரணமாக இடம் பெயர்ந்த நிலையில் மீள் குடியேற்றப்பட்ட கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வாகனேரிக்குளத்தில் மீன்பிடிக்கும் மீனவர்களின் நலன் கருதி அம்கோர் எனும் சர்வதேச தன்னார்வ தொண்டர் அமைப்பினால் அமைக்கப்பட்ட மீனவர் சங்க கட்டிடம் இன்று மீனவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

சுமார் 24 இலட்சம் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட இக்கட்டிடத்தை கிரான் பிரதேச செயலாளர் வீ.தவராசா, அம்கோர் நிறுவன மட்டக்களப்பு மாவட்ட திட்ட  இணைப்பாளர் டனியல் ரிப் ஆகியோர் திறந்து வைப்பதையும், மீனவர்களுக்கான மீன்பிடி தொழில் உபகரணங்களை கையளிப்பதையும் படங்களில் காணலாம். இந்நிகழ்வில் குறித்த நிறுவனத்தின் தேசிய தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் எல்.சசிகரன் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .