2021 மார்ச் 01, திங்கட்கிழமை

சந்தேகநபரை சுட்டுக்கொல்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கியது யார்?: மாகாணசபை உறுப்பினர் இரா.துரைர

Super User   / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)


குற்றவாளி எனச் சந்தேகிக்கப் படுபவர்களை சுட்டுக்கொல்வதற்குரிய அதிகாரத்தை பட்டிப்பளை பொலிஸாருக்கு வழங்கியது யார் என கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளதாக மாகாணசபை உறுப்பினர் இரா துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு முனைக்காட்டில் நேற்றிரவு ஒருவர் துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியான சம்பவம் தொர்பாக எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இக்கேள்வியை எழுப்பியுள்ளார்.


பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதம் தொடர்பாக தமிழ் மிரர் இணையத்தளத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,


குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணையின் மூலம் குற்றம் நிருபிக்கப்படும் பட்சத்தில் சட்டரீதியாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.  மேற்படி முனைக்காட்டைச் சேர்ந்த நபர் குடும்பத்தகராறு காரணமாக குற்றம் இழைக்கப்பட்டவராக முறைபாடு கிடைக்கப்பட்டிருந்தால் அவரை சட்டரீதியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியிருக்க வேண்டும்.
ஆனால்இ பட்டிப்பளை சம்பவமானது மக்கள் மத்தியில் பொலிஸார் மீது இருந்த நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியதுடன் வெறுப்பபையும் ஏற்படுத்தியுள்ளது.


இச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி எமக்கு இது தொடர்பாக தெளிவு படுத்துவதுடன் சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும்.


உரியவர்களுக்கு தண்டனை வழங்கப்படாத பட்சத்தில் எதிர்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு என அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


யுத்தம் முடிவடைந்து சிவில் நிருவாகத்தின்கீழ் மக்கள் வாழும் நிலையில் சட்டத்தினையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதன் ஊடாக அரசுமீது தமிழ்மக்களுக்கு தொடர்ந்தும் வெறுப்புணர்வினையே ஏற்படுத்துவதாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .