Super User / 2010 ஒக்டோபர் 16 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
தென்கிழக்கு பல்கலைகழகத்தில் முதன் முறையாக இந்து மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் கலை விழாவொன்று எதிர்வரும 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இக்கலை விழா தொடர்பாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை இன்று சனிக்கிழமை தென்கிழக்கு பல்கலைகழக இந்து மாணவர் அமைப்பு மட்டக்களப்பில் வைத்து சந்தித்து கலந்துரையாடியது.
இதன் போது பிரதியமைச்சர் முரளிதரன் தென்கிழக்கு பல்கலைக்கழக இந்து மாணவர் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் கலை விழாவுக்குமாக கருணா அம்மான் பவுன்டேஷனினால் ஒரு இலட்சம் ரூபா பணம் பல்கலைக்கழகத்தின் இந்து மாணவர் அமைப்பின் உறுப்பினர் சாவித்திரி நடேசராசாவிடம் பிரதியமைச்சர் கையளித்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக இந்து மாணவர் அமைப்பு கடந்த வாரம் அங்குரார்ப்பனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
19 minute ago
23 minute ago
31 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
23 minute ago
31 minute ago
36 minute ago