2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

டலஸ், ரோஹன மட்டக்களப்புக்கு விஜயம்

Super User   / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித், சுக்ரி)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் இளைஞர் விவகார அமைச்சருமான டளஸ் அழகபெரும மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் ரோஹான குமார திசாநாயக்க   ஆகியோர் இம்மாத இறுதியில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் விசேட அழைப்பையேற்று இம்மாதம் 29ஆம் திகதி வருகை தரும் போக்குவரத்து பிரதியமைச்சர் போக்குவரத்து சபைகளின் பிரதி நிதிகளை மட்டக்களப்பில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்புக்கு வரும் போக்குவரத்து பிரதி அமைச்சர் ரோஹன திசாநாயக்க மட்டக்களப்பிலுள்ள இலஙகி போக்குவரத்து சபையின் அலுவலகத்திற்கு விஜயம் செய்வதுடன் குறைபாடுகள் குறித்தும் ஆராய்வார் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை 30ஆம் திகதி மட்டக்களப்புக்கு வருகை தரவுள்ள இளைஞர் விவகார அமைச்சர் மட்டக்களப்பு தொழிநுட்பக் கல்லூரிக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள், இளைஞர் கழகங்கள், மாவட்ட சம்மேளனங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இளைஞர் விவகார அமைச்சின் கீழ் உள்ள அமைப்புக்களுக்கும் விஜயம் செய்வார் என அறிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .