Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜவீந்திரா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகளற்றுக் காணப்படும் சுங்காங்கேணி கிராமத்திற்கு நேற்று இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டு. மாவட்டக்கிளைத் தலைவர் த.வசந்தராசா உட்பட்ட குழுவினர் சென்று அம்மக்களின் நிலைமையினை நேரில் கேட்டறிந்து கொண்டனர்.
வடமுனை வாகனேரி ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வந்த மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது சுங்காங்கேணி கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் மின்சாரம், வீடு, போக்குவரத்து போன்ற பல வசதிகளை எதிர்பார்ப்பதாக அம்மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இவற்றுள் சில குடும்பங்களுக்கு மேற்படி சங்கத்தினால் சமையல் பாத்திரங்கள், பாய், கூரைவிரிப்புக்கள் என்பனவும் வழங்கப்பட்டன.
.jpg)
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago