2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

காத்தான்குடியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

காத்தான்குடி பள்ளிவாயல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் இன்று சனிக்கிழமை கல்வி சாதனையாளர்கள் பாராட்டு விழாவினை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் நடத்தியது.

2009 ஆம் ஆண்டு 5ஆம் தரப் புலமைப் பரிட்சையில் சித்தியடைந்துள்ள 167 மாணவர்களும். க.பொ.த சாதாரண பரீட்சையில் ஒன்பது அல்லது எட்டு  பாடத்திலும் அதி விசேட சித்திகளைப் பெற்ற 20 மாணவ மாணவிகளும், க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 64 மாணவ மாணவிகளுக்கும்;  பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டப்பட்டனர். அத்துடன் இவர்களுக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களும், வழிகாட்டிய அதிபர்களும் கௌரவிக்கப்பட்டனர்..
மாகாண ரீதியாக பாடசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் புதிய சாதனை நிலைநாட்டிய காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவன் செல்வன் எம்.யூ.எச். மஸி என்பவரும் பாராட்டப்பட்டார்.


அத்துடன் காத்தான்குடியைச் சேர்ந்த இரு கல்விமான்களும் கௌரவிக்கப்பட்டதுடன். காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் மூத்த உறுப்பினர்களான எம்.ஐ.முகைதீன் ஜே.பி;,, ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எல்.எம். ஹஸன் ஆகியோரும் சிறப்பான முறையில் தமது முகாமைத்துவக் காலம் வரை சமூகத்திற்கு ஆற்றிய சேவையை மதித்து பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் தலைமையில் நடைபெற்ற  இவ் வைபவத்தில் மில்லத் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம். ஜெய்னுதீன் கிழக்கு மாகாகண சபை உறுப்பினர்கள், நகர முதல்வர் மற்றும் நகரசபை உறுப்பினர்களுடன் ஊரின் முக்கியஸ்தகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்தி சபையால் ஏற்பாடு செய்யப்பட்டு ஆண்டு தோறும் நடாத்தப்hட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


----


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .