2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அலுவகம் மட்டக்களப்பிலிருந்து மாற்றப்பட்டமை அநீதி: மாநகர சபை உறுப

Super User   / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு பிராந்திய உசாத்துணை அலுவலகம் திடீரென திருகோணமலைக்கு மாற்றப்பட்டது மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு செய்த அநியாயம் என மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய உசாத்துணை அலுவலகம் கடந்த அமைச்சரவையில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சராக இருந்த ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வின் அயராத முயற்சியினால் மட்டக்களப்பு மாவடத்திற்கு கொண்டு வரப்பட்டது.

குறித்த பிராந்திய உசாத்துணை அலுவலகம் மட்டக்களப்பிலுள்ள கல்லடியில் திறக்கப்பட்டு, கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக செயற்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் இவ்வலுவலகம் திடீரென திருகோணமலைக்கு மாற்றப்பட்டது.

இந் நடவடிக்கையானது நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்தியத்திலுள்ள அதன் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை ஏமாற்றத்திற் குள்ளாக்கியிருப்பதுடன் அசௌகரியப் படுத்தியுமுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தின் குடிநீர் பற்றாக்குறையினையும் மக்களின் அடிப்படைத் தேவையினையினையும் பூர்த்தி செய்வதுடன் தற்போது குடிநீர் வழங்கப்பட்டுள்ள 60,000 மேற்பட்ட பாவனையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து அவர்களின் கட்டண பட்டியல் விவகாரங்களை கவனிப்பது எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குரைக்கு முற்றுப்புள்ளி வைத்து சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது தேவைகளை சிரமமின்றி பூர்த்தி செய்து கொள்வதற்குமாகுமே.

ஆனால் கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உத்தியோக பூர்வமாக திறக்கப்பட்ட பிராந்திய உசாத்துணை அலுவலகம் தற்போது 29,000 பாவணையாளர்களைக் கொண்ட திருகோணாமலை மாவட்டத்திற்கு திடீரென  மாற்றப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் 60,000 பாவனையாளர்களையும் பாதிப்படைய செய்துள்ளதோடு எதிர்காலத்தில் பாவனையாளர்கள் பிராந்திய உசாத்துணை அலுவலகத்துடன் நிவர்த்தி செயயப்பட வேண்டிய தேவைகளுக்காக பாவனையாளர்கள் திருகோணமலைக்கு செல்ல வேண்டிய அவசியமும் இதனால் தற்போது ஏற்பட்டுள்ளது.

இது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 60,000 அறுபது ஆயிரம் பாவணையாளர்களுக்கும் ஏனைய மக்களுக்கும் இழைக்கப்பட்ட ஒரு  அநீதியாகும்

எனவே எமது மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நலனில் அக்கறை செலுத்தியும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டம் என்ற வகையிலும் மடடக்களப்பு மாவட்டத்திலிருந்து மாற்றப்பட்ட பிராந்திய உசாத்துணை அலுவலகத்தினை மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் திறப்பதற்கு மாவட்டம் சார்ந்த அனைத்து அரசியல் பிரமுகர்களும் ஒன்றினைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என  அவர் கேட்டுள்ளார்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .