2020 நவம்பர் 25, புதன்கிழமை

கிழக்கில் உலக சிறுவர் விழா

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

"சிறுவர் உலகு ஒளிபெற அனைவரும் ஒளி கொடுங்கள்" என்ற தலைப்பில் முதல் தடவையாக கிழக்கு மாகாண சபை ஏற்பாடு செய்துள்ள உலக சிறுவர் தின விழா நாளை 27ஆம் திகதி மட்டக்களப்பு, தன்னாமுனையில் மாகாண சிறுவர் அபிவிருத்தி சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தலைமையில் நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விக்ரம, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மாகாண அமைச்சர்கள், மாகாண அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண சிறுவர் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .