Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மேம்படுத்தப்பட்ட சமுர்த்தி பயனாளிகள் தமது சமுர்த்தி நிவாரண முத்திரைகளை இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் வைத்து கையளித்தனர்.
உலக வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற வைபவத்தின் போதே சமுர்த்தி திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்ட பயனாளிகள் தமது சமுர்த்தி நிவாரண முத்திரைகளை கையளித்தனர்.
காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் குணரட்னம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி வில்வரட்னம் உட்பட சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
சமுர்த்தி திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்ட சமுர்த்தி பயனாளிகள் தாமாக முன்வந்து இதன் போது நிவாரண முத்திரைகளை உதவி பிரதேச செயலாளரிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

17 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago