Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் மற்றும் கல்வித் திணைக்களம், பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு என்பன இணைந்து பாடசாலை மாணவர்கள் மத்தியில் கை கழுவுதல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தி வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப்பரிவின் காத்தான்குடி கல்விக்கோட்டத்திலுள்ள கிழுறிய்யா மற்றும் நூறானிய்யா பாடசாலைகளில் கை கலுவுதல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வொன்று இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் யு.எல்.எம்.செயினுதீன், ஜக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார இணைப்பாளர் நிரோசி, பெண்களுக்ககான வலு வூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவி சல்மா அமீர் ஹம்சா உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது மாணவர்களுக்கு கை கலுவுதல் தொடர்பான நிகழ்வுகள் செய்முறையில் செய்து காண்பிக்கப்பட்டதுடன் மாணவர்களின் நிகழ்ச்சிகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
41 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
41 minute ago
43 minute ago