2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி செயலக கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பாடசாலை அதிபர்களுக்கு கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன் )

 
ஜனாதிபதி செயலக கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பாடசாலை அதிபர்களுக்கான வாய்மூல ஆங்கில மொழி அறிவூட்டல் கருத்தரங்கு எதிர்வரும் சனிக்கிழமை வாகரை மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
 
ஏற்ன்கனவே வலய மட்டத்தில் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான இரு வார கால  கருத்தரங்கு நடைபெற்று முடிந்தததையடுத்தே அதிபர்களுக்கான இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த இக்கருத்தரங்கு தவிர்க்க முடியாத காரணங்களினால் எதிர்வரும் சனிக்கிழமைக்கு பின்போடப்பட்டதாக  தெரிவித்த மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் செ.சிறீகிருஸ்னராஜாஇ இக்கருத்தரங்கில் கலந்துகொள்ளும் அதிபர்களுக்கு விசேட போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
 
மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம். நிசாம் தலைமையில் நடைபெறவிருக்கும் ஆரம்ப வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்இ  ஆளுநர் வைஸ் அட்மிரல் மோகான் சமரநாயக்கா உட்பட பலர் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
 
இக்கருத்தரங்கில் கலந்துகொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் இ ஆங்கில பாட உதவி கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--