2020 நவம்பர் 25, புதன்கிழமை

அதிபரை இடமாற்றம் செய்யவேண்டாமென பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஆரையம்பதி கல்விக்கோட்டத்திலுள்ள தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தின் அதிபர் நல்லரட்ணம் என்பவரை இடமாற்றம் செய்ய வேண்டாமென தெரிவித்து பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று காலை பாடசாலையைச் சூழ்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட புதிய அதிபரொருவர் இன்று காலை தனது கடமைக்காக சமூகமளித்தப் போது அவரையும் பெற்றோர்கள் உள்ளே செல்ல விடாமல் தடுத்ததுடன், பாடசாலை மாணவர்களையும் பாடசாலைக்குள் அனுமதிக்காமல் பாடசாலையின் பிரதான நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன் போது ஸ்த்தளத்திற்கு விரைந்த ஆரையம்பதி கோட்டக்கல்விப்பணிப்பாளர் நித்தியானந்தன் நிலைமையை சுமூகமாக்கி பழைய அதிபரை இடமாற்றுவதில்லையென உறுதிமொழி வழங்கியதையடுத்து பாடசாலை திறக்கப்பட்டது.

தற்போது பாடசாலையின் பழைய அதிபரே கடமையில் இருப்பதாக கோட்டக்கல்விப்பணிப்பாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--