2020 நவம்பர் 25, புதன்கிழமை

வாகரை பிரதேச விவசாயிகளுக்கு இலவச விதைநெல் மூடைகள்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

வாகரை பிரதேச 233ஆவது படைப்பிரிவின்; கட்டளைத் தளபதி கேணல் ரி.வி.திலக் வீரக்கோன், சிவில் இணைப்பதிகாரி பிரசாத் பெரேரா ஆகியோரால் காவேரிக்குளம் விவசாயிகளுக்கு பெரும்போக  நெற்செய்கைக்கான விதைநெல் மூடைகள்   மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை வழங்கப்பட்டன.

தட்டுமுனை, வாகரை மத்தி, உரியன்கட்டு ஆகிய பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கே மேற்படி விதைநெல் மூடைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

இங்கு உரையாற்றிய ரி.வி.திலக் வீரக்கோன், இவ்விவசாயிகளுக்கு இப்பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், அரசியல்வாதிகள் குளங்களை புனருத்தாணம் செய்து கொடுக்காமையையிட்டும் அவர்களது விவசாயச் செய்கைக்கான உள்ளீடுகளை வழங்காமையையிட்டும் கவலை தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .