Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து மீளக்குடியேறிய வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட உன்னிச்சை, இருனூறுவில் கிராமத்தில் வரட்சி காலத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு இன்று வியாழக்கிழமை தீர்வு காணப்பட்டது.
ஜேர்மன் நாட்டு நிதி உதவித்திட்டத்தின் கீழ் 25 இலட்சம் ரூபாய் செலவில் குளத்தில் சேமிக்கப்படும் நீர் ஊற்றினூடாக வீடுகளிலுள்ள கிணறுகளுக்கு குடிநீரை பெறக்கூடிய வசதி கிடைத்துள்ளது.
சர்வதேச தொண்டர் நிறுவனமான ஆச்சனோவாவினால் இத்திட்டம் அமுல்படுத்தபட்டுள்ளது. இன்று காலை இருநூறுவில் குளத்திற்கு நீரை நிரப்பும் பணிகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆரம்பித்து வைத்தார்.
சுமார் 200 குடும்பங்கள் இதன் மூலம் நன்மையடைந்துள்ளன. ஆச்சினோவா நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி பிரட்சின் மக்சேன் மாவட்ட நிருவாக அதிகாரி என்.வரதராஜன் வவுணதீவு பிரதேச பிரதேச செயலாளர் எஸ்.வில்வரட்னம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
43 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago