2020 நவம்பர் 25, புதன்கிழமை

கிழக்கு மாகாண மீன்பிடி துறையில் முன்னேற்றம்

Kogilavani   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

கிழக்கு மாகாண மக்களின் பிரதான ஜீவனோபாய தொழிலான மீன் பிடித் தொழில் பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளதாகவும் 2005 ஆம் ஆண்டு 25,530 தொன் ஆகக் காணப்பட்ட மீன் உற்பத்தி தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வி.வி.பாலசிங்கம் தெரிவித்தார்.

அடுத்த இரு ஆண்டுகளுக்கு கடற்றொழில் அபிவிருத்திக்கென 12 மில்லியனையும்,  நன்னீர் மீன்பிடிக்கென 34 மில்லியனையும் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

கடந்த கால போர் சூழ்நிலை காரணமாக கடற்கரை பிரதேசத்தை அண்டி வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர். அவர்கள் மீளவும் குடியமர்த்தப்பட்டதுடன் மீன்பிடி உபகரணங்களும் வழங்கப்பட்டு மீன்பிடி தடைகளும் அகற்ப்பட்டதால் மீன்பிடி உற்பத்தி அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--