2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடியில் தொழிற் பயிற்சி நிலையம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.சுக்ரி)

கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் தொழிற் பயிற்சி நிலையமொன்று காத்தான்குடியில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இளைஞர் விவகார அமைச்சினது இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையினதும்  ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள இத்தொழிற் பயிற்சி நிலையத்தினை இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும திறந்து வைத்தார்.

இந்த வைபவத்தில் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண அமைச்சர் நவரத்தினராஜா, இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தம்மிக ஹேவ பத்திரன உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இத்தொழிற் பயிற்சி நியைத்தில் விஷேடமாக கணனி;பிரயோக உதவியாளர் பயிற்சி, ஆடை உற்பத்தி போன்ற தொழிற் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் தெரிவித்தார்.

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் முயற்சியின் பேரில் ஜம்பது மில்லியன் ரூபா செலவில் இப்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--