2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

யுத்தம், சுனாமி பாதிப்புக்குள்ளான வடக்கு, கிழக்கு முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விசேட கொடுப்பனவு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 01 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சிஹாரா லத்தீப்)

யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மகாணங்களில் கடமையாற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விசேட கொடுப்பனவு வழங்குவதற்கு சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்விலேயே, சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விடுத்த கோரிக்கைக்கமைய இம்மாவட்டத்தில் செயல்படும் முன்பள்ளிகளில்  பொதுவான பாடத்திட்டத்தை கொண்டுவருவதற்கு தமது அமைச்சு கல்வியமைச்சின் அனுசரணையில் இம்மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சிநெறியை விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளது என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .