2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

மட்டு.முன்பள்ளி ஆசிரியர் பிரச்சினை; ஜனாதிபதி கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை

Menaka Mookandi   / 2010 நவம்பர் 01 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சிஹாறா லத்தீப்)

மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குறித்த ஆசிரியர்கள் சந்திக்க விரைவில் வாய்ப்புச் செய்து தருவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களின் அபிவிருத்தி வலையமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற முன்பள்ளி ஆசிரியர்களின் ஆக்கத் திறன் கண்காட்சியின் இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'கிழக்கு மாகாண பாடசாலைகளில் கடமையாற்றிய தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அவர்களுக்கு நியமனம் கிடைக்கவும் சம்பளப் பிரச்சனை தீர்த்து வைக்கவும் ஆவணம் செய்தது போல் முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினையையும் தீர்த்து வைக்க ஜனாதிபதியுடானான சந்திப்பினை தான் விரைவில் ஏற்படுத்தித் தரவுள்ளதாகவும்" பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--