2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Super User   / 2010 நவம்பர் 01 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி, ஜிப்ரான்)

காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான முபீன், பரீட், காத்தான்குடி பிரதேச செயலாளர் முஸம்மில் உட்பட திணைக்கள அதிகாரிகள், கிராம உத்தியோகஸ்தர்கள் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி பிரதேச செயலளார் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு உட்பட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்பட்டன.

இவ்வருடத்தில் முடிக்கப்பட வேண்டிய திட்டங்களை டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டுமென பிரதியமைச்சர் இதன் போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .