A.P.Mathan / 2010 நவம்பர் 02 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜதுசன் )
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு சந்தியில் மாணவியொருவரை கடத்த முற்பட்ட இளைஞனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்த சம்பவமொன்று இன்று மாலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது...
பட்டிருப்பு சந்தியிலுள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றில் கல்விகற்கும் உயர்தர வகுப்பு மாணவியொருவர் கல்வி நிலையத்திலிருந்து வெளியில் வரும்போது அவ்விடத்திற்கு ஆட்டோவில் வந்த இளைஞனொருவன் அம்மாணவியை கடத்த முற்பட்டிருக்கிறார். சுதாகரித்துக்கொண்ட மாணவி கூக்குரலிடவும் அவ்விடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்களால் அவ்விளைஞன் மடக்கிப்பிடிக்கப்பட்டு களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இவ்விடயம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .