2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு

Super User   / 2010 நவம்பர் 06 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நோயாளர்கள் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தனர்.

இதனால் அங்கு சிகிச்சைக்காக செல்வோர் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாககவும் அவர்கள் தெரிவித்தனர்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை புதிய கட்டிடத்தில் செயற்பட ஆரம்பித்து ஒரு மாதம் கூட கடக்காத நிலையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளொன்றுக்கு 200க்கும் 300க்குமிடையிளான நோயாளிகள் இவ்வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் இவ்வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகளை வைத்தியர்கள் பரிசோதித்து விட்டு மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதனால் வெளியில் மருந்தை பெறுமாறு சிட்டை எழுதி கொடுத்தனுப்புகின்றனர்.

இது தொடர்பாகாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் யு.எல்.நஸ்ருதீனை தமிழ்மிரர் இணையத்தளம் தொடர்பு கொண்டு வினவியபோது,

வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு என்பது உண்மை தான். எனினும் இத்தட்டுப்பாடு அண்மையில் ஏற்பட்ட ஒன்றல்ல.

இது தொடர்பாக பிரந்திய மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கும் மாகாண சுகாதார அமைச்சுக்கும் அறிவித்துள்ளதாக டாக்டர் நஸ்ருதீன் தெரிவித்தார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .