Super User / 2010 நவம்பர் 08 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
"எனக்கு கிடைத்திருக்கின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் எனும் பதவியைக் கொண்டு இப்பிரதேசத்திற்கும் இம்மாவட்டத்திற்கும் என்னால் முடியுமான சேவைகளை செய்வேன்" என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி சாஹிர் மௌலானா தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏறாவூரிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அலிசாகிர் மௌலானா மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய மௌலானா,
பயங்கரவாத சூழ்நிலை முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற சிறுபான்மைச் சமூகங்கள் மீண்டும் தேசிய கட்சிகளில் இணைந்து கொள்ளக்கூடிய சுதந்திரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
யுத்தம் சூழ்நிலையினை தமக்கு சாதகமாக பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சிறுபான்மை கட்சிகள் தமது முதலீடாக இனவாதத்தை கொண்டிருந்தன.
இதனாலேயே நான் ஒரு போதும் அக்கட்சிகளை ஆதரிக்கவில்லை. இனவாதம் பேசிய அரசியல் வாதிகளின் இனவாதக் கருத்துக்களில் தமிழ் முஸ்லிம் மக்கள் சிக்குண்டிருந்தனர்.
இந்த நாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி இன்னும் தொடர்ந்து பல வருடங்கள் தொடரப் போவது உண்மையாகும்.
இந்த வகையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்புரிமையும் அமைப்பாளர் பதவியும் ஏறாவூர் மண்னுக்கு கிடைக்கப்பெற்றள்ளது.
கட்சியின் நேரடிப் பிரதிநிதிகளுக்கே அதிகாரமும் சலுகைகளும் அதிகம் கிடைக்கும். இதை சரியாக பயன்படுத்தி நமது மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டுமென மேலும் அவர் தெரிவித்தார்.
16 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago