2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உதவி

Super User   / 2010 நவம்பர் 09 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தனது சமூக வேலைத் திட்டத்தினை தற்போது புதிய காத்தான்குடி தெற்கு 167 ஊ கிராம சேவையாளர் பிரிவுக்கும் விஸ்தரித்துள்ளது.

இதனடிப்படையல் புதிய காத்தான்குடி தெற்கில் அமைந்துள்ள பலநோக்கு மண்டபத்திற்கும் அதனோடு இணைந்துள்ள பாலர் பாடசாலைக் கட்டிடத்திற்கும் தேவையான மின்குமிழ்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றது.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை தலைவரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ.ஜி.எம்.ஹாறூன்  மின்குமிழ்களை புதிய காத்தான்குடி தெற்கு 167ஊ கிராம சேவையாளர் எம்.எல்.ஏ அஸீஸிடம் கையளித்தனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--