Super User / 2010 நவம்பர் 09 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜதுசன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் இன்று மலை புதிதாக சுற்றாடல் பாதுகாப்பு பிரிவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடுவவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கென புதிதாக உப பரிசோதகர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.
இப்பிரிவு மூலம் சூழல் மாசடைதலை தடுத்தல், பிரதேசத்தில் டெங்கு நோய் ஒழிப்பு, சூழல் பாதுகாப்பு போன்றன மேற்கொள்ளப்படுமென அவர் தெரிவித்தார்.
தினமும் காலையில் இப்பிரிவினர் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரதேசத்திலுள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று சூழல் பாதுகாப்பு சம்பந்தமாக தகவல்களை திரட்டி நடவடிக்கை எடுப்பர்.
அத்துடன் பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவற்றுடன் இணைந்து இப்பிரிவு செயற்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago