2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

க.பொ.த.சா/த மாணவர்களுக்கான கருத்தரங்கு

Kogilavani   / 2010 நவம்பர் 13 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடிக் கருத்தரங்குகளை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை தலைவராகக் கொண்ட ' இளைஞர்களுக்கான நாளை ' எனும் அமைப்பு ஓட்டமாவடி, வாழைச்சேனைப் பகுதிகளில் நடத்தி வருகின்றது.

' நாளைய உலகை வெற்றி கொள்ள அறிவு ஞானத்தை வளர்ப்போம். எதிர்காலத்தை வெல்வதற்காக அறிவினை வளர்ப்போம் ' என்ற தொனிப்பொருளில் இக் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.

கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மற்றும் ஓட்டமாவடி தேசிய பாடசாலைகளில் இன்று இக்கருத்தரங்குகள் ஆரம்பமாகின.

கோட்டக் கல்வி அதிகாரி எம்.சுபைர் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்ட இக் கருத்தரங்கு,  இவ்வாரமும் அடுத்த வாரம் சனி, ஞாயிறு கிழமைகளிலும் இடம் பெறும் என்று கோட்டக் கல்வி அதிகாரி தெரிவித்தார்.

இரு பாடசாலைகளிலும் நடைபெறும் கருத்தரங்கில் கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள பாடசாலைகளில் இருந்து 350 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளதுடன் பயிற்றப்பட்ட ஆசிரியர்களால் விரிவுரைகள் வழங்கப்படுகின்றன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--