2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

பொருளாதார அமைச்சின் அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட மாநாடு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 18 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி பணிகள் தொடர்பான உயர்மட்ட மாநாடு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அமைச்சின் உதவி பணிப்பாளர் கே.ஜெயசிங்க தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் முன்னிலையில் நடைபெற்ற இம்மாநாட்டில் அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஜீவராஜ், மாவட்ட திட்ட பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட திணைக்கள தலைவர்கள் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இவ்வாண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதார அமைச்சின் கமநகும திட்டத்தின்கீழ் 335மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவது குறிப்படத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--