Menaka Mookandi / 2010 நவம்பர் 19 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)
ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை பல்வேறு சமுர்த்தி அபிவிருத்தி திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதி பணிப்பாளர் நடேசராசா மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலாளர் தணபாலசுந்தரம் உட்பட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு சமுர்த்தி அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைத்து பயணாளிகளிடம் கையளித்தனர்.
கமநெகும திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயணாளிகள் அறுவருக்கு சந்தைப்படுத்தலுக்கான குளிரூட்டிகள் வழங்கப்பட்டதுடன் ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கு கிராமத்தில் திரியபியச திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடு திறக்கப்பட்டு பயணாளியிடம் கையளிக்கப்பட்டது.
இதேபோன்று தாளங்குடா கிராமத்தில் அமைக்கப்பட்ட அணைக்கட்டும் இதன் போது திறந்து வைக்கப்பட்டன. ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு இந்த நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago