Super User / 2010 டிசெம்பர் 05 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
காத்தான்குடி வாவியில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி முதலாம் குறிச்சி அல் அக்ஷா மீனவர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய அதிகாரி ஐ.பி.புஷ்ப குமார, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான முபீன், பரீட், காத்தான்குடி நகர சபையின் தலைவர் மர்சூக், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் றம்ழான் உட்பட பொலிஸ் அதிகாரிகள் மீனவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை காத்தான்குடியில் முப்பது இலட்சம் பெறுமதியான சட்டவிரோதமான மீன்பிடி வலைகளை பொலிஸார் கைப்பற்றிச்சென்றதையடுத்து காத்தான்குடி வாவியில் மீனவர்கள் மீன்பிடிப்பதை தற்காலிகமாக நிறுத்தியிருப்பது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆராயப்பட்டு சுமுகமான தீர்வு காணப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழம தொடக்கம் இம்மீனவர்கள் மீன் பிடிப்பதை தற்காலிமாக நிறுத்தியதுடன் கடந்த புதன் கிழமையன்று இவர்கள் ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
28 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago
33 minute ago