Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 06 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி )
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகளுக்கான தலைமைத்துவ பயிற்சிநெறி கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் நடத்தப்பட்டுவருகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகளுக்கான இரண்டு நாள் தலைமைத்துவ பயிற்சிநெறி இன்று திங்கட்கிழமை காலை காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இவ் ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.கலீலுற் றஹ்மான், காத்தான்குடி பிரதேச செயலாளர் முஸம்மில், காத்தான்குடி பிரதேச செயலக பிரிவு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மாலதி ஆகியோர் கலந்துகொண்டனர். இப்பயிற்சிநெறி நாளை செவ்வாய்க்கிழமையுடன் நிறைவுபெறும்.
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .