2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

ரயில் மோதி முச்சக்கர வாகன சாரதி பலி

Super User   / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

ஏறாவூர் மிக் நகர் வீதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் முச்சக்கர வாகனமொன்று ரயிலுடன் மோதியதால் முச்சக்கர வாகன சாரதி ஸ்தலத்திலேயே பலியானார்.

ஏறாவூரைச் சேர்ந்த எஸ்.எல். ரஷின் (வயது 19) என்பவரே பலியானகியுள்ளார்.

இம்முச்சக்கர வாகனம் 300 மீற்றர் தள்ளிச்செல்லப்பட்டுள்ளது. இறைச்சிக்கடை கழிவுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு மேலும் இரு பயணிகளும் இதில் பயணம் செய்ததாகவும் ஆனால் அவர்கள் பாய்ந்து தப்பிவிட்டனர் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து மாஹோ நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் வண்டியே இன்று காலை 11. 25 மணியளவில் முச்சக்கர வாகனம் மீது மோதியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--